இந்தியா தனது முதல் வணிக ரீதியான வெப்பமண்டல மறுசுழற்சி வழியிலான மீன் வளர்ப்பு அமைப்பு (RAS) அடிப்படையிலான ரெயின்போ டிரவுட் மீன் பண்ணையை தெலுங்கானாவில் தொடங்கியுள்ளது.
திறன் மிகு பசுமை மீன் வளர்ப்பு பண்ணை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஐதராபாத்தில் திறக்கப்பட்டது.
இந்தத் திட்டம் தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள கந்துகூர் மண்டலத்தில் அமைந்துள்ளது.
இது பாரம்பரியமாக குளிர்ந்த இமயமலைப் பகுதிகளில் மட்டுமே வளர்க்கப்படும் ரெயின்போ டிரவுட் மீனின் ஆண்டு முழுவதுமான வளர்ப்பினை செயல்படுத்துகிறது.
மீன் வளர்ச்சிக்கு ஏற்ற சூழல்களைப் பேணுவதற்கு RAS கட்டுப்படுத்தப்பட்ட நீர் சுழற்சியைப் பயன்படுத்துகிறது.
இந்த முன்னெடுப்பு மீன்வளத் துறையில் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் மீன் வளர்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டை ஆதரிக்கிறது.