முதல்நிலை சாதனையாளர்கள் விருது 2018 மற்றும் சிறந்த சுரங்கக் கருவிகள் விற்பனை விருது
October 30 , 2018 2542 days 784 0
2017 - 18 ஆம் நிதியாண்டில் சிறப்பான செயல்பாட்டிற்காக 2018 ஆம் ஆண்டிற்கான முதல்நிலை சாதனையாளர்கள் விருதை பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம் வென்றுள்ளது (Bharat Earth Movers Limited - BEML).
மேலும் இந்நிறுவனம் சுரங்கத் துறைக்காக மண் லாரி மற்றும் வலிமையானவற்றை தூக்கிக் கொட்டும் வாகனம் ஆகிய ஊர்திக் கருவிகளை விற்பனை செய்ததற்காக சிறந்த விற்பனையாளர் விருதையும் வென்றுள்ளது.
பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனமானது மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மினி ரத்னா பொதுத் துறை நிறுவனமாகும்.
இந்த விருது ஏஎஸ்ஏஏபி உலகளாவிய தகவல் குழுவால் ஏற்படுத்தப்பட்டது.
மேல்நிலை நோக்கிய மற்றும் கீழ்நிலை நோக்கிய உயர்வு, லாபத்தை தக்க வைத்தல் மற்றும் நிதியியல் ஆதாரத்தை குறிப்பிட்ட எல்லைக்குள் வைத்துக் கொள்ள சிறந்த நிர்வாகத்தை அளித்தல் ஆகியவற்றின் செயல்பாட்டு மதிப்பீடு அடிப்படையில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.