முதல்முறையாக தொலைபேசி அழைப்பு வாயிலான முதல் தகவல் அறிக்கை
September 21 , 2018 2424 days 738 0
நாட்டில் உத்தரப் பிரதேச காவல்துறை முதலாவது முறையாக தொலைபேசி அழைப்பு வாயிலாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்த இருக்கின்றது.
இத்திட்டத்தில் ஒரு சாதாரண பொது மனிதன் காவல் நிலையத்திற்கு செல்லாமல் வழக்கமான குற்றங்களை உத்தரப்பிரதேச காவல்துறை தொலைபேசி எண்ணான 100 என்ற எண்ணுக்கு அழைத்து தொலைபேசி அழைப்பு வடிவத்திலான முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய முடியும்.
குற்றங்களை தடுப்பதற்காக, மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 1 லட்சம் சிறிய மற்றும் பெரிய குற்றவாளிகளின் தகவல்கள் அடங்கிய நேரடி இணையதள தொகுப்பு ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப்பிற்கு பிறகு உத்தரப் பிரதேசம் மட்டுமே இத்தகைய உள்ளூர் குற்றவாளகிளின் நேரடி தகவல் தொகுப்பை தயாரித்த இரண்டாவது மாநிலமாகும்.