தமிழக அரசானது, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்த உள்ளது.
இதன் மூலம், இந்த மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப் பட்டுள்ளது.
K. காமராஜின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஜூலை 15 ஆம் தேதியன்று இந்தத் திட்டத்தின் விரிவாக்கம் தொடங்கப்படும்.
தொடக்கக் கல்வி இயக்குநரகம் ஆனது பெரும்பாலும் நகர்ப்புற உதவி பெறும் பள்ளிகளை உள்ளடக்கிய சுமார் 1,416 பள்ளிகளை இந்தத் திட்டத்தில் சேர்ப்பதற்காகப் பட்டியலிட்டுள்ளது.
தற்போது, 34,987 பள்ளிகளில் 17.53 லட்சம் மாணவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன் அடைகிறார்கள்.
இந்தத் திட்டமானது, 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப் பட்டது.
2024–25 ஆம் கல்வியாண்டில், கிராமப் புறத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இது விரிவுபடுத்தப் பட்டது.