2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதியன்று தமிழக முதல்வர், மாநில உதவி பெறும் நகர்ப்புற தொடக்கப் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தும் திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தொடக்க விழாவில் தலைமை விருந்தினராகக் பங்கேற்பார்.
இந்த விரிவாக்கம் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 3.05 லட்சம் கூடுதல் மாணவர்கள் பயனடைவார்கள்.
2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத நிலவரப்படி, 34,987 பள்ளிகளில் சுமார் 17.53 லட்சம் மாணவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டமானது, ஆரம்பத்தில் அரசு நடத்தும் தொடக்கப் பள்ளிகளுக்கும், படிப்படியாக நகர்ப்புற அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
இதுவரை, இந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் கிராமப்புறங்களில் மட்டுமே அமைந்து உள்ள அரசு நடத்தும் தொடக்கப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் மட்டும் செயல்படுத்தப்பட்டது.
2025-26 ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்திற்காக தமிழக அரசு 600.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
மதிப்பீடுகள் இந்தத் திட்டம் அரசு தொடக்கப் பள்ளிகளில் வருகையை அதிகரித்து, குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தியது, மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவதை 63.2% குறைத்தது மற்றும் கடுமையான நோய்களை 70.6% குறைத்தது என்பதைக் காட்டுகிறது.