TNPSC Thervupettagam

முதியவர்களுக்கான போஷான் அபியான் திட்டம்

March 26 , 2021 1569 days 695 0
  • முதியவர்களுக்கு “ஊட்டச்சத்து ஆதாரத்தினை” வழங்குவதற்கான “போஷான் அபியான்” திட்டத்தினை சமூக நல மற்றும் அதிகாரமளிப்புத் துறை அமைச்சகம் தொடங்க உள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ், முதியோர் இல்லங்களில் தங்கியிருக்காத, ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஆதரவில்லாத முதியவர்களுக்கு உதவிகள் வழங்கப் படும்.
  • சூடான சமைத்த மதிய உணவினை வழங்க உள்நாட்டிலேயே கிடைக்கும் சத்தான உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்வதில் இத்திட்டம் கவனம் செலுத்தும்.
  • இத்திட்டமானது கிராம பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சி அமைப்புகளால் அமல்படுத்தப் படும்.
  • “மூத்த குடிமக்கள் நல நிதி” என்ற நிதியானது இத்திட்டத்திற்கு நிதி வழங்கவும் அமல்படுத்தவும் பயன்படுத்தப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்