TNPSC Thervupettagam

முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான அஞ்சல் வாக்கு

November 1 , 2019 2078 days 624 0
  • தேர்தல் நடத்தை விதிகள் 1961ஐ மத்திய சட்டத் துறை அமைச்சகம் திருத்தியுள்ளது.
  • இந்த திருத்தமானது மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கும் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் வாக்களிப்பு மற்றும் வாக்குச்சீட்டு வாக்களிப்பை வழங்குவதற்கான அதிகாரத்தைக் கொண்டுள்ளது. இது அவர்களை 'வாக்களிக்கத் தவறிய வாக்காளர்கள்' என்ற பிரிவில் சேர்த்துள்ளது.
  • தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் பொருட்டு, முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு இந்த வசதியை அரசு வழங்குகிறது.
  • தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி மத்திய சட்டத் துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  •  'வாக்களிக்க வர முடியாத வாக்காளர்கள்' என்று கோருவதற்கான பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்ப படிவத்தின் மாதிரி தற்பொழுது தயாரிக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம் மூத்த குடிமக்கள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் தபால் வாக்குச்சீட்டைக் கோரலாம்.
  • தற்போதைய அமைப்பில், இராணுவ & துணை ராணுவ வீரர்கள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், தேர்தல் பணியில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் மட்டுமே அஞ்சல் வாக்குச்சீட்டைப் பெற உரிமை உடையவர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்