சென்னை காவல்துறையானது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்காக 1252 என்ற உதவி எண்ணுடன் ஒரு முதியோர் உதவி மையத்தை நிறுவியுள்ளது.
2024 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட "பந்தம்" என்ற சிறப்பு ஆதரவுத் திட்டம், 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடிமக்களுக்கு நேரடி உதவியை வழங்குகிறது.
இந்த உதவியில் மருத்துவ உதவி, சட்ட உதவி, ஆலோசனை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் காவல் துறையின் வழிகாட்டுதல் ஆகியவை அடங்கும்.
2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, "பந்தம்" மையம் ஆனது 185 சட்ட, 6 மருத்துவ, 5 பாதுகாப்பு மற்றும் 41 அத்தியாவசிய சேவைகள் உட்பட 1,191 வழக்குகளை 72 மணி நேரத்திற்குள் தீர்த்துள்ளது.
மற்றொரு முன்னெடுப்பான காவல் கரங்கள், இந்த ஆண்டு ஆதரவற்றுக் கைவிடப் பட்ட 646 முதியோர்களை மீட்டதோடு அவர்களில் 117 நபர்களின் முகவரிகள் உடனே கண்டறியப் பட்டு அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்கப்பட்டனர்.