முதியோர் சேமிப்புத் திட்டம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி விதிகள்
November 15 , 2023 629 days 423 0
பிரபலமான முதியோர் சேமிப்புத் திட்டம் (SCSS), பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் 5 ஆண்டு அஞ்சல் அலுவலக கால வரம்பு வைப்புத் திட்டத்தில் அரசாங்கம் பல முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது.
55 வயதுக்கு மேற்பட்ட ஆனால் 60 வயதுக்குக் குறைவான ஓய்வு பெற்ற தனிநபருக்கு முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட ஒரு மாத காலத்திற்குப் பதிலாக தற்போது மூன்று மாதங்கள் வழங்கப்படும்.
இந்தப் புதிய விதிகள் ஆனது, ஓர் அரசு ஊழியரின் மனைவி, இந்த நிதி உதவித் தொகை திட்டத்தில் முதலீடு செய்ய வழி வகை செய்கிறது.
கணக்கு வைத்திருக்கும் ஒருவர் நீட்டிப்பு எண்ணிக்கை வரம்புகள் எதுவுமின்றி ஒவ்வொரு தொகுதியையும் மூன்று ஆண்டு என்று கால வரம்பு கொண்ட கணக்கைத் தொடர்ந்து நீட்டிக்க முடியும்.
முன்னதாக, ஒரு முறை மட்டுமே நீட்டிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது.
தற்போதுள்ள கணக்கு அல்லது கணக்குகளை நிறுத்துதல், அதற்கு எதிராக புதிய கணக்குகள் ஆனது அதிகபட்ச வைப்பு வரம்புக்கு உட்பட்டு வைப்புதாரரின் தேவைக்கேற்ப மீண்டும் திறக்கப் படலாம்.