கரக்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் முதியோர்களுக்காக ஆண்ட்ராய்டு செயலி ஒன்றை வடிவமைத்துள்ளனர்.
இந்தச் செயலியானது பராமரிப்பாளரை முதியோருடன் இணைக்கின்றது. இது “முதியோருக்கு மருந்தை நினைவூட்டல்” வசதியைக் கொண்டுள்ளது.
இந்தச் செயலி மருந்து தொடர்பான முந்தையக் கணக்குகள், எதிர்விளைவு தொடர்பானவை, SOS பொத்தான், நிகழ்நேர இடம் குறித்த கண்காணிப்பு மற்றும் பிறவற்றைக் கொண்டுள்ளது.