TNPSC Thervupettagam

முதுவன் பழங்குடியினர் – கேரளா

August 16 , 2025 5 days 47 0
  • மூணாறு பகுதியில் உள்ள சூர்யநெல்லி அருகே உள்ள செம்பகத்தொழுக்குடியில் முதுவன் பழங்குடியினரின் மூன்று நாட்கள் அளவிலான மாநாடு நடைபெற்றது.
  • பழங்குடியினரின் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்க முதுவன் ஆதிவாசி சமுதாயச் சங்கத்தால் இது ஏற்பாடு செய்யப்பட்டது.
  • முதுவன்கள் அல்லது முதுகர்கள் சமூகம் ஆனது பழங்குடி மொழியைத் தொடர்ந்து பயன்படுத்தத் தீர்மானித்தது.
  • இடுக்கி, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் சுமார் 25,000 முதுவன் மக்கள் வாழ்கின்றனர்.
  • முதுவான் சமூகத்தில் மலையாள முதுவன், பாண்டி முதுவன் என இரு வேறு குழுக்கள் உள்ளன.
  • முதுவன் சமூகமானது குழுப் பிரிவிற்குள் திருமண முறை (எண்டோகமி) மற்றும் குழுப் பிரிவிற்கு வெளியேயான திருமண முறையைக் கடைபிடிக்கின்றனர்.
  • அவர்கள் ‘கனி முறை’ எனப்படும் தனித்துவமான ஆட்சி முறையைப் பின்பற்றுகிறார்கள்.
  • ஒரு வகையான மாற்று (பெயர்ச்சிப் பயிரீட்டு) சாகுபடி முறையான விரிப்புக்கிருஷி, அவர்களின் பாரம்பரிய வாழ்வாதார வழிமுறையாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்