இந்தியா மற்றும் ஐக்கிய இராஜ்ஜியம் ஆகிய இரு நாடுகளும் புத்தாக்க நிறுவனங்களுக்குப் பயனளிக்கும் வகையில் தங்களதுப் புத்தாக்கச் சூழலமைவினை மேம்படுத்த விரும்புவதால், இந்த இருநாடுகளும் தங்களது உலகப் புத்தாக்கக் கூட்டாண்மையைத் தொடங்கியுள்ளன.
வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்புத் துறையில் இந்தியாவுடன் இணைந்துப் பணியாற்ற விரும்பும் ஜெர்மனி, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ் போன்ற பிற நாடுகளுடனான திட்டங்களுக்கு முத்தரப்பு மேம்பாட்டுக் கழக (TDC) நிதியைப் பயன்படுத்துவதற்கான ஒரு மாதிரியை இந்தக் கூட்டாண்மை வழங்கும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.
இந்தக் கூட்டாண்மைக்கு இந்தியாவும் இங்கிலாந்தும் இணைந்து நிதியளிக்க உள்ளன.