பிரபலமாக முத்தலாக் மசோதா என்றறியப்படும் இஸ்லாமிய பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதாவை மக்களவையானது நிறைவேற்றி இருக்கின்றது.
இந்த மசோதாவானது செப்டம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்திற்குப் பதிலாக மாற்றப்படுகின்றது.
இந்த மசோதாவானது எழுத்து அல்லது மின்னணு வடிவம் உள்பட அனைத்து வடிவத்திலும் முத்தலாக்கை அறிவித்தல் செல்லுபடியாகாதது என்றும் சட்டவிரோதமானது (சட்டப்படி அமல்படுத்த இயலாது) என்றும் அறிவிக்கின்றது.
முத்தலாக் கூறுதல் சட்டப்படியான மற்றும் அபராதத்துடன் கூடிய 3 வருட சிறைத் தண்டனையளிக்கப்படக் கூடிய ஒரு குற்றம் ஆகும்.