TNPSC Thervupettagam

முத்துசாமி தீட்சிதரின் 250வது பிறந்தநாள்

December 3 , 2025 2 days 64 0
  • 2025 ஆம் ஆண்டு ஆனது கர்நாடக இசையின் மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதரின் 250வது பிறந்தநாளைக் குறிக்கிறது.
  • அவர் 1775 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் திருவாரூரில் பிறந்தார்.
  • அவர் சுமார் 229 பாடல்களை உருவாக்கியதாக அறியப்படுகிறது; அவற்றில் பல சங்கீத சம்பிரதாய பிரதர்ஷினியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • அவர் விளம்ப கலா எனப்படும் மிதமான மற்றும் விரிவான இசை கட்டமைப்புகளைப் பயன்படுத்தி சமஸ்கிருதத்தில் இசையமைத்தார்.
  • பிருந்தாவன சாரங்கம், த்விஜவந்தி, யமுனா கல்யாணி, மணிரங்கு, நாராயண கவுளா போன்ற ராகங்களில் அவர் இயற்றிய இசையமைப்புகள்/பாடல்கள் அவற்றின் அமைப்பை நிறுவ உதவியது.
  • ஹேமாவதி, குமுதக்ரியா, நாக காந்தாரி போன்ற சில ராகங்கள் முக்கியமாக அவரது கிருதிகள் (இசையமைப்புகள்) மூலம் நன்கு அறியப்பட்டன.
  • கர்நாடக இசை ஆய்வுகளின் மையமான கமலாம்பா நவாவரணா மற்றும் அபயம்ப விபக்தி தொடர்கள் போன்ற முக்கிய படைப்புகளை அவர் உருவாக்கினார்.
  • 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட குருகுஹாம்ருதா என்ற இசை இயக்கம் ஆனது, அதன் தனித்துவமான ராகங்கள் மற்றும் இசை பாணியை வெளிப்படுத்த இந்தக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்