திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை பகுதியில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய சதுப்புநிலக் காடுகள் அமைந்துள்ளன.
பாக் ஜலசந்தியில் சுமார் 120 சதுர கி.மீ பரப்பளவில் பரவியுள்ள இந்தப் பகுதியில் அவிசென்னியா மெரினா எனும் அலையாத்தி மரங்கள் அதிகம் காணப்படுகின்றன.
2022 முதல் 2025 ஆம் ஆண்டு வரையில் இந்த சதுப்புநிலப் பரப்பளவு 2,057 ஹெக்டேர் அதிகரித்துள்ளது.
இந்தப் பகுதியானது ஆறு பாதுகாக்கப் பட்ட காடுகளை உள்ளடக்கிய வகையில் முத்துப்பேட்டை ஈர நில வளாகத்தையும் உள்ளடக்கியது.
2004 ஆம் ஆண்டில் இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட மீன் முள் கால்வாய் நுட்பம் ஆனது, ஓதங்களின் பாய்வு மற்றும் விதை பரவலை மேம்படுத்தியது.
2023–24 ஆம் ஆண்டில், இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி 350 ஹெக்டேர் பரப்பளவிலான பகுதி சுத்திகரிக்கப்பட்டது.
நாற்றுகள் செழித்து வளர்வதை மேம்படுத்துவதற்காக என்று ஒரு புதிய "படி நிலை கால்வாய்" மாதிரி சோதிக்கப்பட்டு வருகிறது.
இந்த மூன்று ஆண்டு கால முன்னெடுப்பானது, கோரையாறு மற்றும் பாமனியாறு ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் 12,020 ஹெக்டேர் பரப்பில் மேற்கொள்ளப் படுகிறது.
மொத்தம் 1,350 ஹெக்டேர் பரப்பிலான காடுகள் புதிதாக உருவாக்கப்பட்டன என்ற ஒரு நிலையில் மேலும் 707 ஹெக்டேர்கள் பரப்பானது கால்வாய் பழுது மற்றும் தூர்வாருதல் மூலம் மீட்டெடுக்கப் பட்டது.
இதில், 1,482 ஹெக்டேர் பரப்பிலான காடுகள் தஞ்சாவூரிலும் மற்றும் 575 ஹெக்டேர் பரப்பிலான காடுகள் திருவாரூரிலும் இருந்தன.
ஆரம்பகாலக் கணக்கெடுப்புகள் 700 ஹெக்டேர் பரப்பிலான பரப்புச் செடிகளை நடவு செய்வதற்கும், 800 ஹெக்டேர்கள் பரப்பு எதிர்கால மறுசீரமைப்புக்கும் அடையாளம் காணப் பட்டன.
பசுமைத் தமிழ்நாடு திட்டமானது இந்த முன்னெடுப்பினை ஆதரித்தது என்பதோடு தோட்டக்கலை மற்றும் கால்வாய்ப் பணிகள் மூலம் சுமார் 86,000க்கும் மேற்பட்ட மனித உழைப்பு நாட்களுக்கான வேலை வாய்ப்புகளை இது உருவாக்கியது.
2022–23 ஆம் ஆண்டில் மட்டும், 31,000 மனித உழைப்பு நாட்கள் பதிவு செய்யப்பட்டன மேலும் 2023–24 ஆம் ஆண்டில் 32,397 மனித உழைப்பு நாட்கள் உருவாக்கப்பட்டன.