கடலூரில் தலைமையகத்தைக் கொண்ட முந்திரி வாரியத்தை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்காகவும், முந்திரி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிப்பதற்காகவும் இந்த வாரியம் அமைக்கப் பட்டுள்ளது.
முந்திரி உற்பத்தியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே ஐந்தாவது இடத்தில் உள்ளது மற்றும் முந்திரி ஏற்றுமதியில் இரண்டாவது பெரிய மாநிலமாகவும் உள்ளது.
மாநிலத்தில் 2.09 லட்சம் ஏக்கரில் பயிரிடப்படுகின்ற முந்திரி பருப்பு ஆனது, இந்த ஆண்டு 43,460 மெட்ரிக் டன் அளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
2025–2026 ஆம் ஆண்டின் வேளாண் நிதி ஒதுக்கீட்டில் அறிவிக்கப்பட்டபடி 10 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் இந்த வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது.
வேளாண் அமைச்சர் தலைமையில் செயல்படுகின்ற இந்த வாரியமானது, முக்கிய வேளாண்மை மற்றும் ஏற்றுமதி அமைப்புகளைச் சேர்ந்த 12 உறுப்பினர்களை உள்ளடக்கியதாக இருக்கும்.