உலக வானிலை அமைப்பு ஆனது "the Early Warnings for All initiative" என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த முன்னெடுப்பானது, 2027 ஆம் ஆண்டிற்குள் பல இடர் முன் எச்சரிக்கை அமைப்புகளுடன் ஒவ்வொரு நபரையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தரவு தரத்தை மேம்படுத்துவதற்காக உலகளாவிய அடிப்படை கண்காணிப்பு வலை அமைப்பின் விரிவாக்கம் மற்றும் தேசிய வலையமைப்புகளின் தானியங்கி மயமாக்கலை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
WMO தகவல் அமைப்பு 2.0-ன் துவக்கம் நிகழ்நேர உலகளாவிய தரவுப் பரிமாற்றத்தைச் செயல்படுத்துவதோடு, வளங்கள் குறைவாக உள்ள வானிலை சேவைகளை கூட இணைக்கிறது.
புயல்கள், வெள்ளம், வறட்சி மற்றும் தீவிர வெப்பத்திற்கான செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கணிப்புகள் உட்பட WMO ஒருங்கிணைந்தச் செயலாக்கம் மற்றும் முன்கணிப்பு அமைப்பு மூலம் முன்னறிவிப்புத் திறன்கள் மேம்பட்டுள்ளன.