முன்னாள் MLA/MLCகளின் மாதாந்திர மற்றும் குடும்ப ஓய்வூதியங்கள்
April 29 , 2025 167 days 128 0
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்களின் (MLC) மாதாந்திர மற்றும் குடும்ப ஓய்வூதியங்களை அதிகரிப்பதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர்களின் மாதாந்திர ஓய்வூதியம் ஆனது, 30,000 ரூபாயிலிருந்து 35,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
இது 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும்.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்களின் குடும்ப ஓய்வூதியம் ஆனது 15,000 ரூபாயிலிருந்து 17,500 ரூபாயாக உயர்த்தப்படும்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்களுக்கான மருத்துவ உதவித் தொகையானது 75,000 ரூபாய்க்குப் பதிலாக 1 லட்சம் ரூபாயாக வழங்கப் படும்.