முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி சீனியர் ஜார்ஜ் H.W புஷ் மறைவு
December 2 , 2018 2418 days 826 0
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் தனது 94-வது வயதில் காலமானார்.
இவர் 41 வது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தார் (1989-1993). மேலும் இவர் 43 வது அமெரிக்க ஜனாதிபதியான ஜூனியர் ஜார்ஜ் W புஷ்ஷின் தந்தையும் ஆவார்.
ஒரே ஒரு முறை ஜனாதிபதியாக பதவி வகித்த சீனியர் புஷ் 1991 ல் குவைத்தில் இருந்து பாலைவன புயல் நடவடிக்கை (Operation Desert Storm) மூலமாக ஈராக் நாட்டின் படைகளை வெளியேற்றிய 32 நாடுகளைக் கொண்ட கூட்டணியின் பிரபல தலைவர் ஆவார்.
இவர் 1991 ல் மிக்கேல் கார்பச்சேவுடன் வரலாற்று சிறப்பு மிக்க ‘யுக்திசார்ந்த ஆயுதக் குறைப்பு உடன்படிக்கையை' கையெழுத்திட்டு சோவியத் யூனியனுடனான பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்தார்.