முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர்களின் புகைப்படம் கொண்ட சுவர்
July 13 , 2022 1038 days 453 0
இந்தியாவில் பிறந்த கீதா கோபிநாத் சர்வதேச நாணய நிதியத்தின் ‘முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர்களின் புகைப்படம் கொண்ட சுவரில்’ இடம் பெற்று உள்ளார்.
இந்தப் பெருமையைப் பெற்ற முதல் பெண் மற்றும் இரண்டாவது இந்தியர் இவர் ஆவார்.
ரகுராம் ராஜன் இந்த பெருமையைப் பெற்ற முதல் இந்தியர் ஆவார்.
இவர் 2003 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணராகவும், ஒரு ஆராய்ச்சி இயக்குநராகவும் பணி ஆற்றியவர் ஆவார்
கீதா கோபிநாத் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநராக பதவி உயர்வு பெற்றார்.