முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கலின் கீழ் ஸ்டார்ட் அப் துறை
August 12 , 2020 1861 days 814 0
இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI - Reserve Bank of India) இந்தியாவின் ஸ்டார்ட் அப் துறைக்கு முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கல் (PSL - Priority sector lending) அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
இது ஸ்டார்ட் அப்களுக்கு கடன் வழங்குவதற்காக வேண்டி அதிக நிதியை ஏற்படுத்த உள்ளது.
இந்திய அரசு மற்றும் RBI ஆகியவை நாட்டின் அடிப்படைத் தேவைகளின் வளர்ச்சிக்கு முக்கியமான துறைகள் என்று கருதப்படும் துறைகளுக்கு மற்ற துறைகளை விட அதிக முன்னுரிமை அளிக்கும் என்பதை இது குறிக்கின்றது.
பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளுக்கான PSL விதிகளுக்காக வெளியிடப்பட்ட RBI வழிகாட்டுதல்களின்படி, 40% மொத்த நிகர வங்கிக் கடனானது முன்னுரிமைத் துறைக்கு வழங்கப் பட வேண்டும்.