உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப் மற்றும் UNFPA ஆகியவற்றின் முன்னேற்றக் கண்காணிப்பு மதிப்பீட்டு அறிக்கையானது, சமீபத்தில் நடைபெற்ற 'சர்வதேச பேறு கால பச்சிளம் குழந்தைகள் சுகாதார மாநாட்டில்' (IMNHC 2023) வெளியிடப் பட்டது.
2020-2021 ஆம் ஆண்டில் மொத்தம் 4.5 மில்லியன் இறப்புகள் பதிவானதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இது பேறுகாலத் தாய்மார்கள் இறப்பு (0.29 மில்லியன்), இறந்து பிறந்த குழந்தைகள் (1.9 மில்லியன்) மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்புகள் (2.3 மில்லியன்) ஆகியவற்றை உள்ளடக்கியது.
உலக அளவில் பதிவான பேறுகாலத் தாய்மார்கள் இறப்புகள், இறந்து பிறந்த குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்புகளில் 60 சதவீதத்தினைக் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது.
மேலும், உலகளவில் உயிருடன் பிறந்த குழந்தைகள் எண்ணிக்கையில் இந்தியா 51 சதவீதத்தினைக் கொண்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் உலகளவில் பதிவான 4.5 மில்லியன் என்ற மொத்த இறப்புகளில் இந்தியா 7,88,000 பேறுகாலத் தாய்மார்கள் இறப்புகள், இறந்து பிறந்த குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.
பேறுகாலத் தாய்மார்கள் இறப்புகள், இறந்து பிறந்த குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்புகளின் பதிவில் இந்தியாவினைத் தொடர்ந்து நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ ஜனநாயகக் குடியரசு, எத்தியோப்பியா, வங்காளதேசம் மற்றும் சீனா ஆகிய நாடுகள் உள்ளன.
ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதிகள் மற்றும் மத்திய மற்றும் தெற்கு ஆசியா ஆகியவை அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளப் பகுதிகளாகும்.