TNPSC Thervupettagam

முன்னோடி வங்கித் திட்ட வழிகாட்டுதல்கள் 2026

June 28 , 2026 10 days 107 0
  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆனது தனது முந்தைய அறிவுறுத்தல்களை மாற்றி, 2026 ஜூன் 19 அன்று அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை மூலம் திருத்தப்பட்ட முன்னோடி வங்கித் திட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
  • முன்னோடி வங்கித் திட்டம் என்பது இந்தியாவில் கடன் திட்டமிடல் மற்றும் நிதி உள்ளடக்கத்திற்கான மாவட்ட அளவிலான வங்கி ஒருங்கிணைப்பு அமைப்பாகும்.
  • ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு முன்னோடி வங்கி ஒதுக்கப்படும் என்பதுடன் புதிய திருத்தப்பட்டக் கட்டமைப்பானது, பணியாளர்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆதரவுடன் கூடிய பிரத்தியேக மாவட்ட முன்னோடி மேலாளர் இருப்பதை கட்டாயமாக்குகிறது.
  • இந்த அமைப்பானது, வட்டார அளவிலான வங்கியாளர்கள் குழு (BLBC), மாவட்ட ஆலோசனைக் குழு (DCC) மற்றும் மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு (SLBC) ஆகிய மூன்று அடுக்குக் கட்டமைப்பின் மூலம் செயல்படுகிறது.
  • கிராமப்புற மற்றும் பகுதி நகர்ப்புற கிளைகளுக்கான 60% கடன்-வைப்பு (CD) விகித அளவுகோலைத் தக்க வைத்துள்ள RBI, விவசாயம் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) மீதான தனது கவனத்தையும் வலுப்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்