முப்படைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப கருத்தரங்கு
September 28 , 2025 2 days 9 0
புது டெல்லியில் நடைபெற்ற முதல் முப்படைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்பக் கருத்தரங்கை (T-SATS) முப்படை இராணுவ தலைமைத் தளபதி (CDS) தொடங்கி வைத்தார்.
இந்தியாவிற்கான அதிநவீன, உள்நாட்டு பாதுகாப்புத் தொழில்துறை தொழில் நுட்பங்களை இணைந்து உருவாக்குவதற்காக கல்வி நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், தொழில் துறைகள் மற்றும் ஆயுதப்படைகளை ஒன்றிணைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
எதிர்கால ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை முறைப்படுத்துவதற்காக சென்னையின் இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கழகம், மணிப்பால் உயர் கல்விக் கழகம், இராஷ்ட்ரிய ரக்சா பல்கலைக்கழகம் மற்றும் நிர்மா பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
இந்தக் கருத்தரங்கின் கருத்துரு, "விவேக் வா அனுசந்தன் சே விஜய்" (ஞானம் மற்றும் ஆராய்ச்சி மூலம் வெற்றி) என்பதாகும்.