டிஜிட்டல் (எண்ணிம) தயாரிப்பின் அடுத்தத் தலைமுறைத் தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வகையில் முப்பரிமாண அச்சாக்கத்தின் (சேர்க்கைத் தயாரிப்பு) தேசிய அளவிலான உத்தியானது அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் (சிறிய) தொழிற்சாலைகளால் எதிர்கொள்ளப்படும் சில உடனடியான குறைபாடுகளைத் தணிப்பதே இதன் நோக்கமாகும்.
இதன் மூலம் இயந்திரங்கள், பொருட்கள் மற்றும் மென்பொருள்களுக்கான 50 இந்தியா சார்ந்த தொழில்நுட்பங்கள், 100 புதிய சேர்க்கைத் தயாரிப்பு தொடக்க நிறுவனங்கள் மற்றும் 500 புதிய தயாரிப்புகள் உள்ளிட்ட சில இலக்குகளை 2050 ஆம் ஆண்டிற்குள் அடைவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.
சேர்க்கைத் தயாரிப்பு எனவும் அழைக்கப்படும் ஒரு முப்பரிமாண அச்சாக்கமானது தயாரிப்புப் பொருட்களின் மாதிரிகளை உருவாக்கும் ஒரு செயல்முறையாகும்.