முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட ஏவுகல எந்திரத்திற்கான காப்புரிமை
September 16 , 2022 1216 days 645 0
அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனமானது, முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட அதன் ஏவுகல எந்திரத்தின் வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கான முதல் காப்புரிமையைப் பெற்றுள்ளது.
அதன் அக்னிலெட் ஏவுகல எந்திரத்திற்காக வேண்டி அந்த நிறுவனத்திற்கு காப்புரிமை அளிக்கப் பட்டுள்ளது.
இது இந்த ஆண்டின் இறுதியில் ஏவப்பட உள்ள அந்நிறுவனத்தின் அக்னிபான் ஏவுகல எந்திரத்தினை இயக்கும்.
அக்னிகுல் காஸ்மோஸ் இந்தியாவின் தனியார் விண்வெளி சார்ந்த புத்தொழில் நிறுவனங்களில் ஒன்றாகும்
அக்னிலெட் ஒரு ஒற்றைப் பொருள் இயந்திரம் ஆகும்.
இது இந்தியாவில் முழுமையாக வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட உலகின் முதல் ஒற்றைப் பொருளாலான முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட ஏவுகல எந்திரமாகும்.
இது 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.