முப்பரிமாணத்தில் அச்சிடப்பட்ட வைரஸ் எதிர்ப்பு பொருள் பூசப்பட்ட முகக் கவசம்
June 16 , 2021 1482 days 651 0
தின்கெர் டெக்னாலஜீஸ் இந்தியா (Thincr Technologies) எனும் தனியார் நிறுவனமானது முப்பரிமாணத்தில் அச்சிடப்பட்ட வைரஸ் எதிர்ப்பு பொருள் பூசப்பட்ட முகக் கவசத்தினை வடிவமைத்துள்ளது.
தின்கெர் டெக்னாலஜி நிறுவனமானது பூனாவில் அமைந்துள்ள ஒரு புத்தாக்க நிறுவனமாகும்.
இந்த முகக்கசங்களில் விருசைட்ஸ் (virucides) எனப்படும் ஒரு வைரல் எதிர்ப்புப் பொருளானது பூசப்பட்டுள்ளது.
இந்த விலை மலிவான முகக்கவசங்கள் கோவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதன் உருவாக்கத் திட்டத்திற்கு தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தினால் (Technology Development Board) நிதி உதவி வழங்கப்பட்டது.
மெர்க் லைஃப் சைன்சஸ் (Merck Life Sciences) எனும் நிறுவனத்தின் உதவியுடன் இந்த முகக் கவசங்கள் உருவாக்கப்பட்டன.