இந்தியத் தலைமை நீதிபதி B.R. கவாய் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதியன்று கோலாப்பூரில் மும்பை உயர் நீதிமன்றத்தின் தற்காலிக/சுற்று அமர்வினைத் திறந்து வைத்தார்.
2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் ஒரு ஈராயம் மற்றும் இரண்டு ஒற்றை அமர்வுகளுடன் இந்த அமர்வு செயல்பாட்டுக்கு வந்தது.
இது கோலாப்பூர், சதாரா, சாங்லி, சோலாப்பூர், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் ஆகிய ஆறு மாவட்டங்களின் அதிகார வரம்பைக் கொண்டிருந்தது.
இதன் மூலம் மகாராஷ்டிராவில் கோலாப்பூரை நாக்பூர் மற்றும் ஔரங்காபாத்திற்குப் பிறகு மூன்றாவது சுற்று அமர்வாகவும், கோவாவில் உள்ள போர்வோரிம் உட்பட ஒட்டு மொத்தமாக நான்காவது இத்தகைய அமர்வாகவும் மாற்றியது.
மும்பையில் உள்ள முதன்மை அமர்வினைத் தவிர, மும்பை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர அமர்வுகள் விதர்பாவில் உள்ள நாக்பூர் மற்றும் மராத்வாடாவில் உள்ள ஔரங்காபாத் (சத்ரபதி சம்பாஜிநகர்) ஆகியவற்றில் இருந்தன.
மும்பை உயர் நீதிமன்றத்தின் மூன்றாவது அமர்வு அருகிலுள்ள கோவாவின் போர்வோரிமில் அமைந்தது.
மும்பை உயர் நீதிமன்றம் மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களுக்கும், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ ஒன்றியப் பிரதேசத்திற்கும் நீதிச் சேவையை வழங்கியது.
இது 1861 ஆம் ஆண்டு இந்திய உயர் நீதிமன்றச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட இந்தியாவின் பழமையான உயர் நீதிமன்றங்களில் ஒன்றாகும்.