'மும்பை ஓபன்: 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் மகளிர் டென்னிஸ் போட்டி
July 26 , 2017 2835 days 1248 0
இந்தியாவில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மகளிர் டென்னிஸ் போட்டி (டபிள்யூ.டி.ஏ/WTA) வரும் நவம்பர் மாதம் மும்பையில் நடைபெறவுள்ளது.
ஆஸ்திரேலிய ஒபனுக்கு முன்பாக, இந்தப் போட்டி இந்தியாவில் நடைபெறும். உலகத் தரவரிசையில் 11 முதல் 50 இடங்களுக்குள் இருக்கும் வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்து கொள்வர்.
இதனிடையே, இந்தியாவில் நடைபெற்று வந்த ஒரே ஏடிபி போட்டியான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை, மும்பை டென்னிஸ் சங்கம் சமீபத்தில் புனேவுக்கு கொண்டு வந்துள்ளது. அந்தப் போட்டி இனி மகாராஷ்டிர ஓபன் என்ற பெயரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.