மும்பை பயங்கரவாத தாக்குதலின் (26/11) 10-ம் ஆண்டு நிறைவு
November 28 , 2018 2346 days 820 0
இந்தியா நவம்பர் 26, 2018 அன்று 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலின் 10-வது ஆண்டு நிறைவை அனுசரித்தது.
இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு 5 மில்லியன் டாலர் பரிசை அமெரிக்கா அறிவித்துள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் 2008-ல் லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் மும்பையில் கடற்வழியாக வந்து மூன்று நாட்களுக்கு நீடித்த ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தினர்.
இந்த தீவிரவாத நடவடிக்கைக்குப் பதிலடியாக தாக்குதல் நடத்தியவர்களை பிடிப்பதற்காக தேசிய பாதுகாப்புப் படையினரால் தாஜ் ஓட்டலில் “பிளாக் டொர்னாடோ நடவடிக்கை” நடத்தப்பட்டது.
தாக்குதல் நடத்தியவர்களில் உயிருடன் பிடிக்கப்பட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் மட்டுமே ஆவான். நவம்பர் 21, 2012 அன்று புனேயின் எரவாடா சிறைச்சாலையில் அஜ்மல் தூக்கிலிடப்பட்டான்.