TNPSC Thervupettagam

முரியா பழங்குடியினர் பிரச்சினைகள்

April 16 , 2024 13 days 272 0
  • சத்தீஸ்கரின் தண்டகாரண்யா பகுதியில் உள்ள சுக்மா, தண்டேவாடா மற்றும் பீஜப்பூர் மாவட்டங்களில் இருந்து வெளியேறிய முரியா பழங்குடியினர், ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் குடியேறினர்.
  • முரியா குடியேற்றங்கள் என்பவை உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த மக்களின் (IDPs) வாழ்விடங்களாக அறியப் படுகின்றன என்ற நிலையில் ஆந்திரப் பிரதேசத்தில் அவர்களின் மக்கள் தொகை சுமார் 6,600 ஆகும்.
  • இங்குள்ள முரியா இனத்தவர்கள் அந்தப் பகுதியின் பூர்வீக பழங்குடியினரால் 'குட்டி கோயாஸ்' என்று குறிப்பிடப்படுகிறார்கள்.
  • முரியாக்கள் உணவுப் பயிர்களை வளர்ப்பதற்காக வேண்டி காப்புக் காடுகளுக்குள் உள்ள காடுகளை அழித்துள்ளனர்.
  • வனத் துறையினர் அவர்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்க மறுப்பதற்காக முன் வைக்கும் முக்கியப் பிரச்சினையாகும்.
  • ஒரு பத்தாண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, சில முரியா குடியேற்றங்கள் இதற்கான தடை உத்தரவைப் பெற்றுள்ளனர்.
  • இடதுசாரி தீவிரவாதிகளுக்கும், நக்சல் அமைப்புகளை எதிர்கொள்வதற்காக என்று  நியமிக்கப் பட்ட சல்வா ஜூடும் என்ற மாநில அரசு ஆதரவு பெற்ற அமைப்புகளுக்கும் இடையிலான மோதலின் போது அவர்கள் சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் உள்ள தங்கள் சொந்தக் கிராமத்திலிருந்துத் தப்பி வெளியேறினர்.
  • நந்தினி சுந்தர் & பிறர் எதிர் சத்தீஸ்கர் மாநில அரசிற்கும் இடையிலான வழக்கில் (2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம்), உச்ச நீதிமன்றம் ஆனது சல்வா ஜூடும் அமைப்பானது அரசியலமைப்பிற்கு எதிரானது என்று அறிவித்து, அதை உடனடியாகக் கலைக்குமாறு சத்தீஸ்கர் மாநில அரசிற்கு உத்தரவிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்