TNPSC Thervupettagam

முர்ஷிதாபாத் சதுப்பு நிலங்கள்

February 25 , 2026 2 hrs 0 min 26 0
  • "தெற்கு வங்காளத்தின் சிறுநீரகங்கள்" என்று அழைக்கப்படும் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள சதுப்பு நிலங்கள் ஆண்டுக்கு சுமார் 2.1% என்ற அளவில் வேகமாக சுருங்கி வருகின்றன.
  • இந்தச் சுருக்க விகிதம் உலக சராசரியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு மற்றும் இந்தியாவின் தேசிய சராசரியை விட சுமார் 1.5 மடங்கு அதிகம்.
  • 1990 ஆம் ஆண்டில் 5,524.7 ஹெக்டேராக இருந்த 14 முக்கிய ஈர நிலங்களின் மொத்த பரப்பளவு 2025 ஆம் ஆண்டில் 1,700.2 ஹெக்டேராகக் குறைந்துள்ளதாக ஒரு ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.
  • ஈர நிலங்கள் நீர் ஓட்டங்களை ஒழுங்குபடுத்தவும், நிலத்தடி நீரை மீள்நிரப்பவும், மீன் வளம் மற்றும் விவசாயத்தை ஆதரிக்கவும் உதவுகின்றன.
  • இந்த ஈரநிலங்களில் பாதிக்கும் மேற்பட்டவை ஆக்கிரமிப்பு களைகள், வண்டல் படிவு மற்றும் மாசுபாடு காரணமாக கடுமையாக சீரழிந்து வருகின்றன.
  • 14 ஈரநிலங்களில் 4 மட்டுமே இன்னும் செயல்பாட்டு நதி இணைப்புகளைக் கொண்டு உள்ளன என்பதோடு இது நீர் இயக்கத்தையும் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தையும் குறைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்