TNPSC Thervupettagam

முறைசாரா துறையில் பெண்களின் பாதுகாப்பு குறித்த அறிக்கை

December 22 , 2025 3 days 21 0
  • பெண்கள் அதிகாரமளிப்பதற்கான பாராளுமன்றக் குழு, "முறைசாரா துறையில் பெண்களின் காப்பு மற்றும் பாதுகாப்பு" என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டது.
  • கட்டுமானத் தொழிலாளர்கள், பீடி தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் இணையவழித் தொழிலாளர்களாக பணி புரியும் பெண்களை இந்த அறிக்கை உள்ளடக்கியது.
  • புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்கள் பெரும்பாலும் பதிவு செய்யப்படாமலும், தொழிலாளர் சட்டங்களின் கீழ் சரியான பாதுகாப்பு இல்லாதவர்களாகவும் உள்ளனர் என்று அது கூறுகிறது.
  • சில பிராந்தியங்களில் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் (PM-SYM) திட்டத்தில் பெண் தொழிலாளர்களின் சேர்க்கை குறைவாக இருப்பதாக அறிக்கை கண்டறிந்து உள்ளது.
  • 2013 ஆம் ஆண்டு பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் உள்ள பல உள்ளூர் குழுக்கள் முழுமையாகச் செயல்படவில்லை அல்லது நன்கு அறியப் படவில்லை என்பதை அது குறிப்பிடுகிறது.
  • சக்தி திட்டத்தில் உள்ள பால்னா திட்டத்தின் கீழ், 6.24% நிதி மட்டுமே பயன்படுத்தப் பட்டது மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 14,599 அங்கன்வாடி மற்றும் பகல் நேரக் குழந்தைப் பராமரிப்பு மையங்களில் 2,425 மையங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்