முறைப்படுத்தப்படாத வைப்பு நிதித் திட்டங்கள் மீதான தடை
July 31 , 2019 2114 days 636 0
முறைப்படுத்தப்படாத வைப்பு நிதித் திட்டங்கள் மீதான தடை மசோதா, 2019 ஆனது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
வைப்பு நிதியைப் பெறும் திட்டமானது பின்வருபவையாக இருப்பின் அவை “முறைப்படுத்தப்படாதது” என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி வணிக நோக்கத்திற்காகப் பெறப்பட்டால்
இந்த நிதி மசோதாவில் உள்ள பட்டியலிடப்பட்டுள்ள ஒழுங்குமுறை அமைப்புகளிடம் பதிவு செய்யப்படாமல் இருப்பின்
மாநில / மத்திய அரசுச் செயலாளர் தகுதி நிலைக்குக் கீழ் இல்லாத ஒரு தகுதி வாய்ந்த அதிகாரி இது போன்ற திட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்காக அரசு அதிகாரிகளாக நியமிக்கப்பட விருக்கின்றனர்.
இது வைப்பு நிதியைப் பெறும் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு மையப்படுத்தப்பட்ட தரவுத் தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக எந்தவொரு குற்றங்கள் தொடர்பான வழக்குகளையும் அதற்கென பிரத்தியேகமாக ஏற்படுத்தப்பட்ட நீதிமன்றங்கள் விசாரிக்கும்.