உலகளாவிய வானிலை மற்றும் பருவநிலைத் தரவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் உலகின் முதல் பருவநிலை-நிதிப் பத்திரமாக முறையான கண்காணிப்பு தாக்கப் பத்திரம் தொடங்கப்பட்டது.
இந்தப் பத்திரம் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முறையான கண்காணிப்பு நிதி வசதி (SOFF) மூலம் சுமார் 200 மில்லியன் டாலரை திரட்டுவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
இது 30 குறைவான வளர்ச்சியடைந்த நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் சிறிய தீவு நாடுகளை உலகளாவிய அடிப்படைக் கண்காணிப்பு வலையமைப்பு (GBON) தர நிலைகளை பூர்த்தி செய்ய ஆதரிக்கிறது.
இதன் முடிவுகள் உலக வானிலை அமைப்பு (WMO) சுயாதீனமாக சரி பார்க்கப் பட்டு உள்ளதுடன், இந்த முன்னெடுப்பு ஆனது சர்வதேச அளவில் பகிரப்பட்ட வானிலை மற்றும் பருவநிலை அவதானிப்புகளில் ஐந்து மடங்கு அதிகரிப்பை இலக்காகக் கொண்டுள்ளது.
கண்காணிப்பு இடைவெளிகளைப் பூர்த்தி செய்வது 5 பில்லியன் டாலர் மதிப்பிலான நேரடி வருடாந்திர நன்மைகளை வழங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இது 160 பில்லியன் டாலர் வரையிலான மாபெரும் பொருளாதார ஆதாயங்களைப் பெற உதவும்.
இது UNEP, WMO மற்றும் UNDP ஆகியவற்றால் நிறுவப்பட்ட UN நிதியான முறையான கண்காணிப்பு நிதி வசதி (SOFF) என்ற அமைப்பால் வழி நடத்தப் படும்.