TNPSC Thervupettagam

முழு உடல் பாதுகாப்புக் கருவி

May 29 , 2019 2259 days 762 0
  • முதன்முறையாக இந்தியாவிலுள்ள பெண் காவலர்கள் மற்றும் துணை இராணுவப் படை வீரர்கள் “பெண்களை மையமாகக் கொண்ட” உடல் பாதுகாப்புக் கவசம் அல்லது முழு உடல் பாதுகாப்புக் கருவியைப் (FBP - full body protector) பெறவிருக்கின்றனர்.
  • இது பல்வேறு அச்சுறுத்தல்களைத் தாங்கிக் கொள்ளும் திறன் கொண்டது. இது கத்தியால் தாக்குவதிலிருந்து தப்பித்தல், கிழிசல் எதிர்ப்பு, தாக்கத்திலிருந்து தப்பித்தல், தீ மற்றும் அமிலத்தை எதிர்த்தல் ஆகியவற்றை மேற்கொள்கின்றது.
  • இது புது தில்லியில் உள்ள உடலியல் மற்றும் அது சார்ந்த அறிவியலுக்கான பாதுகாப்பு மையத்தினால் (DIPAS - Defence Institute of Physiology & Allied Science) மேம்படுத்தப்பட்டது.
  • DRDOவின் கீழ் இயங்கும் DIPAS அமைப்பு 1962-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
  • இது பல்வேறு தொழில்சார் சூழலில் உடலியல், உயிர் வேதியியல், ஊட்டச் சத்து மற்றும் பணிச்சூழலியல் அணுகுமுறைகளைப் பயன்படுத்தி மனித செயல்திறனை மேம்படுத்துவதற்காக பணியாற்றுகின்றது.
  • DRDO ஆனது இப்பொருள்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கான 5 உரிமங்களை வழங்கவிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்