TNPSC Thervupettagam

முழு எழுத்தறிவு நிலை – உத்தரகாண்ட்

July 12 , 2026 13 hrs 0 min 68 0
  • 'உல்லாஸ் – நவ பாரத் சாக்சரதா கார்யக்ரம்' (புதிய இந்தியா எழுத்தறிவுத் திட்டம்) -இன் கீழ், இந்தியாவின் ஆறாவது முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக உத்தரகண்ட் மாறியது.
  • இம்மாநிலம் 98% அல்லது அதற்கும் அதிகமான எழுத்தறிவு விகிதத்தை எட்டி, முழு எழுத்தறிவுச் சான்றிதழ் பெறுவதற்கான தகுதிகளைப் பூர்த்தி செய்தது.
  • இதற்கு முன்னதாக, மிசோரம், கோவா, திரிபுரா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலங்களாக அறிவிக்கப்பட்டன.
  • இத்திட்டத்தின் கீழ், 15 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே குறைந்தது 95% என்ற அளவில் வயது வந்தோர் எழுத்தறிவு விகிதத்தை எட்டிய பிறகு, ஒரு மாநிலம் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அங்கீகரிக்கப்படுகிறது.
  • இத்திட்டத்தின் கீழ் முழு எழுத்தறிவுச் சான்றிதழைப் பெற்ற முதல் ஒன்றியப் பிரதேசமாக லடாக் திகழ்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்