முழு எழுத்தறிவு பெற்ற மாநிலம் - இமாச்சலப் பிரதேசம்
September 13 , 2025
9 days
77
- 99.30 சதவீத எழுத்தறிவு விகிதத்துடன் இமாச்சலப் பிரதேசம் 4வது முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- ULLAS – நவ பாரத சக்சார்த்த காரியக்ரம் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட தேசிய எழுத்தறிவு அளவுருவான 95 சதவீதத்தை இந்த மாநிலம் தாண்டியுள்ளது.
- மாணவர்-ஆசிரியர் விகிதத்தில் இமாச்சலப் பிரதேசம் தற்போது நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது என்பதோடு மேலும் இடைநிற்றல் விகிதம் சுழியாக உள்ளது.
- சுதந்திரத்தின் போது 7 சதவீத எழுத்தறிவு என்ற நிலையில் தொடங்கி 99.30 சதவீதத்தை இது முன்கூட்டியே எட்டியது.
- 2024 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதியன்று, லடாக் முழு எழுத்தறிவு பெற்ற முதல் ஒன்றியப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.
- மற்ற மூன்று மாநிலங்கள் திரிபுரா, மிசோரம் மற்றும் கோவா.
- மே 20, 2025 அன்று, மிசோரம் இந்தியாவின் முதல் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாறியது.
Post Views:
77