ULLAS (சமூகத்தில் அனைவருக்கும் வாழ்நாள் கற்றலைப் புரிந்துகொள்ளுதல்) திட்டத்தின் கீழ் இந்தியாவின் ஐந்தாவது முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக சிக்கிம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-இன் ULLAS (நவ பாரத் சாக்ஷரதா காரியக்ரம்) முன்னெடுப்பின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட எழுத்தறிவு வரையறைகளை சிக்கிம் எட்டியுள்ளது.
முழு எழுத்தறிவு பெற்ற மாநிலங்களாக ஏற்கெனவே உள்ள மிசோரம், கோவா, திரிபுரா மற்றும் இமாச்சலப் பிரதேசத்துடன் தற்போது சிக்கிமும் இணைகிறது.
வயது வந்தோரின் எழுத்தறிவு 95%-ஐத் தாண்டும்போதும், அடையாளம் காணப்பட்ட படிப்பறிவில்லாத மக்கள் எழுத்தறிவுத் திட்டங்களின் மூலம் உள்ளடக்கப் படும் போதும், ஒரு மாநிலம் பொதுவாக முழு எழுத்தறிவு பெற்றதாகக் கருதப்படுகிறது.
ULLAS திட்டம், வயது வந்தோருக்கான அடிப்படை எழுத்தறிவு, வாழ்க்கைத் திறன்கள், தொழிற்கல்வித் திறன்கள், அடிப்படைக் கல்வி மற்றும் தொடர்கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.