முழு டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற மாநிலம்
August 25 , 2025
15 hrs 0 min
39
- கேரளா இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- டிஜிட்டல் திறன்களைக் கொண்டு குடிமக்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட டிஜி கேரளா திட்டத்தின் கீழ் இந்தச் சாதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- இரண்டாம் கட்டத்தில் டிஜிலாக்கர் வசதியுடன் இணைக்கப்பட்ட அனைத்து அத்தியாவசிய ஆவணங்களும் எண்ணிம/டிஜிட்டல் மயமாக்கப்படும்.
- இணையவெளிக் குற்றங்களை அடையாளம் காணவும், சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் குடிமக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
- மாநிலம் முழுவதும் சுமார் 9,000 அரசு சேவைகள் தற்போது இயங்கலையில் கிடைக்கப் பெறுகின்றன.
Post Views:
39