இரண்டு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்திற்குப் பதவி உயர்த்தப் பட்டதன் மூலம் இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் பலமானது தற்போது அதன் முழு எண்ணிக்கையான 34 ஆக உள்ளது.
இதற்கு முன்பு, 2019 ஆம் ஆண்டு செப்டம்பர்-நவம்பர் மாதங்களில் தான் உச்ச நீதிமன்றம் தனது முழு பலத்துடன் செயல்பட்டது.
பாராளுமன்றம் ஆனது 1956 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற (நீதிபதிகள் எண்ணிக்கை) சட்டத்தினை இயற்றி, நீதிபதிகளின் எண்ணிக்கைக்கான அதிகபட்ச உச்ச வரம்பை நிர்ணயிப்பதற்காக அச்சட்டத்தினை திருத்தியுள்ளது.
1956 ஆம் ஆண்டில் ஒரு தலைமை நீதிபதியுடன் சேர்த்து கூடுதலாக மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்த்தப்பட்டது.
இச்சட்டமானது, 1960 ஆம் ஆண்டில் 14, 1978 ஆம் ஆண்டில் 18, 1986 ஆம் ஆண்டில் 26, 2009 ஆம் ஆண்டில் 31 மற்றும் 2019 ஆம் ஆண்டில் 33 என உயர்த்தப்படுவதற்காக மேலும் பலமுறை திருத்தியமைக்கப் பட்டது.