TNPSC Thervupettagam

முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் இந்தியாவின் முதல் பசுமை இழுவைப் படகு

December 9 , 2025 2 days 89 0
  • பசுமை இழுவைப் படகிற்கான மாற்றத் திட்டத்தின் (GTTP) கீழ், தீன்தயாள் துறைமுக ஆணையத்திற்காக (DPA) முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் தனது முதல்  பசுமை இழுவைப் படகு ஒன்றை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.
  • அமைதியான செயல்பாடுகள், சுழிய அளவிலான கார்பன் உமிழ்வு மற்றும் 60 டன் பொல்லார்டு இழுவை திறன் கொண்ட துறைமுகப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த இழுவைப் படகு வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • GTTP ஆனது, முதல் கட்டத்தில் (2024–2027) 16 இழுவைப் படகுகளுடன், 2030 ஆம் ஆண்டிற்குள் 50 பசுமை இழுவைப் படகுகளை சேர்க்கத் திட்டமிட்டுள்ளது.
  • DPA, பாரதீப் துறைமுக ஆணையம், ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் மற்றும் V.O. சிதம்பரனார் துறைமுக ஆணையம் ஆகியவை முதல் கட்டத்தில் தலா இரண்டு இழுவைப் படகுகளைப் பெறுகின்றன.
  • எதிர்காலப் பசுமை திட்டங்களுக்கான தரவை வழங்கும் அதே வேளையில், படைத் துறை நடவடிக்கைகள், பாதுகாப்பு மற்றும் அவசரகாலப் பணிகளில் இந்த இழுவைப் படகு உதவும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்