முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் இந்தியாவின் முதல் பசுமை இழுவைப் படகு
December 9 , 2025 34 days 154 0
பசுமை இழுவைப் படகிற்கான மாற்றத் திட்டத்தின் (GTTP) கீழ், தீன்தயாள் துறைமுக ஆணையத்திற்காக (DPA) முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் தனது முதல் பசுமை இழுவைப் படகு ஒன்றை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.
அமைதியான செயல்பாடுகள், சுழிய அளவிலான கார்பன் உமிழ்வு மற்றும் 60 டன் பொல்லார்டு இழுவை திறன் கொண்ட துறைமுகப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த இழுவைப் படகு வடிவமைக்கப் பட்டுள்ளது.
GTTP ஆனது, முதல் கட்டத்தில் (2024–2027) 16 இழுவைப் படகுகளுடன், 2030 ஆம் ஆண்டிற்குள் 50 பசுமை இழுவைப் படகுகளை சேர்க்கத் திட்டமிட்டுள்ளது.
DPA, பாரதீப் துறைமுக ஆணையம், ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் மற்றும் V.O. சிதம்பரனார் துறைமுக ஆணையம் ஆகியவை முதல் கட்டத்தில் தலா இரண்டு இழுவைப் படகுகளைப் பெறுகின்றன.
எதிர்காலப் பசுமை திட்டங்களுக்கான தரவை வழங்கும் அதே வேளையில், படைத் துறை நடவடிக்கைகள், பாதுகாப்பு மற்றும் அவசரகாலப் பணிகளில் இந்த இழுவைப் படகு உதவும்.