முழுமையான இயற்கை வேளாண்மைக்கான ஒன்றியப் பிரதேசம் - லடாக்
October 28 , 2026 17 days 198 0
இந்தியாவின் முதல் 100% இயற்கை வேளாண்மைக்கான ஒன்றியப் பிரதேசமாக லடாக்கை துணைநிலை ஆளுநர் வினாய் குமார் சக்சேனா அறிவித்தார்.
இந்த அறிவிப்பானது லே மற்றும் கார்கில் மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளதுடன் செயற்கை உரங்கள் மற்றும் ரசாயன பூச்சிக்கொல்லிகளில் இருந்து படிப்படியாக மாறியதைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், விவசாயத்திற்காக ரசாயன மற்றும் செயற்கை உரங்களை கொள்முதல் செய்தல், விநியோகம் செய்தல், விற்பனை செய்தல், சந்தைப் படுத்துதல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை லடாக் தடை செய்தது.
2026 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதிக்குள் 207 கிராமங்கள் இயற்கை வேளாண்மைச் சான்றிதழைப் பெற்றுள்ளன.
முக்கிய இயற்கை வேளாண்மைப் பொருட்களில் பாதாமி (ஆப்ரிகாட்), சீ பக்ல்தார்ன், பக்வீட், பார்லி மற்றும் காய்கறிகள் ஆகியவை அடங்கும்.
தேசிய இயற்கை உற்பத்திக்கான திட்டம் (NPOP) இந்தியாவின் இயற்கை வேளாண்மைத் தரங்களை அமைக்கிறது. மேலும் இது வேளாண் மற்றும் பதப்படுத்தப் பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தால் (APEDA) நிர்வகிக்கப் படுகிறது.
2016 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் முழுமையான இயற்கை வேளாண்மை மாநிலமாக சிக்கிம் உருவானது.