முழுமையான செயல்பாட்டுக் கல்வியறிவு பெற்ற முதல் மாவட்டம்
August 21 , 2022 1191 days 889 0
மத்தியப் பிரதேசத்தின் மாண்ட்லா மாவட்டம் முழுமையான செயல்பாட்டுக் "கல்வி அறிவு" பெற்ற இந்தியாவின் முதல் மாவட்டமாக மாறியுள்ளது.
2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் போது, மாண்ட்லா மாவட்டத்தில் கல்வியறிவு விகிதம் 68% ஆக இருந்தது.
2020 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட மற்றொரு அறிக்கை, இந்த மாவட்டத்தில் 2.25 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கல்வியறிவு இல்லாதவர்கள் என்றும், அவர்களில் பெரும்பாலோர் வனப் பகுதிகளைச் சேர்ந்தப் பழங்குடியினர் என்றும் கூறுகிறது.
தற்பொழுது அங்குள்ள அனைத்து மக்களும் தங்கள் பெயர்களை எழுதவும், எண்களை எண்ணவும், படிக்கவும் முடியும் என்று அந்த மாவட்டத்தின் ஆட்சியர் கூறுகிறார்.
ஒரு நபர் தனது சொந்தப் பெயரை ஏதேனும் ஒரு மொழியில் எழுதவும், எண்களை எண்ணவும் படிக்கவும் எழுதவும் முடியும் போது அவர் /அவள் முழுமையான அளவில் கல்வியறிவு பெற்றவர் என்று அழைக்கப்படுவார்.