இந்தியாவின் தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வானது, முழுமையான நீதியை உறுதி செய்ய உச்ச நீதிமன்றங்கள் எந்தவொரு கட்டுப்பாடற்ற அதிகாரத்தையும் எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
சீராய்வு மனுக்களில் சட்டத்தின் மீதான கேள்விகளை ஒரு பெரிய அமர்விற்குக் குறிப்பிட்டு மாற்றுவதில் இந்த நீதிமன்றத்தின் விருப்பப்படிச் செயல்படுவதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஒரு உயரிய நீதிமன்றமாக இருப்பதால், எந்தவொரு விஷயமும் அதன் அதிகார எல்லைக்குள் வருகிறதா இல்லையா என்பதை இந்த நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்.
வரையறுக்கப்பட்ட அதிகார வரம்பைக் கொண்ட நீதிமன்றத்தைப் போலல்லாமல், உயரிய நீதிமன்றம் தனது சொந்த அதிகார வரம்பைப் பற்றிய கேள்விகளைத் தானே தீர்மானிக்க உரிமை உண்டு.
இவ்வழக்கில் ஒன்பது உறுப்பினர் அடங்கிய அமர்வு அரசியலமைப்பின் 142வது பிரிவையும் அதற்காகச் செயல்படுத்தியது.