முழுவதுமாக எத்தனால் எரிபொருளில் இயங்கும் உலகின் முதல் டொயோட்டா இன்னோவா கார்
September 1 , 2023 735 days 382 0
மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, முழுவதுமாக எத்தனால் எரிபொருளில் இயங்கும் டொயோட்டாவின் இன்னோவா ஹைக்ராஸ் மகிழுந்து ரகத்தினை அறிமுகப் படுத்தினார்.
இந்த ரக மகிழுந்தானது உலகின் முதல் BS-VI தர என்ஜின்களைக் கொண்ட (நிலை-II), மின்சாரக் கலவை-எரிபொருள் வாகனம் என்று கூறப்படுகிறது.
கலவை-எரிபொருள் வாகனங்கள் (FFV) உள்ளக எரிப்பு இயந்திரத்தினைக் கொண்டு உள்ளதோடு, அவை பெட்ரோல், பெட்ரோல் மற்றும் எத்தனால் கலவை போன்ற எந்தக் கலவையிலும் செயல்படும் திறன் கொண்டவை ஆகும்.
மாற்று மற்றும் பசுமை எரிபொருள் ஆற்றல் பயன்பாட்டினை மேம்படுத்துவதற்காக, டொயோட்டா மீராய் EV எனப்படும் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் மின்சார மகிழ்ந்து கடந்த ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது.