முழுவதும் குவிமாடம் கொண்ட இந்தியாவின் முதலாவது முப்பரிமாண டிஜிட்டல் அரங்கம்
February 26 , 2019 2426 days 750 0
முழுவதும் குவிமாடம் கொண்ட இந்தியாவின் முதலாவது முப்பரிமாண டிஜிட்டல் அரங்கமானது கொல்கத்தாவில் அறிவியல் நகரத்தில் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மாவால் துவங்கி வைக்கப்பட்டது.
இதற்கு மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தால் முழுவதுமாக நிதியளிக்கப்பட்டது.
பார்வையாளருக்கு ஒரு முழுமையான அதிவேக அனுபவத்தை அளிப்பதற்காக 23 மீட்டர் உயரமுடைய குவிமாடத்தைக் கொண்டுள்ள முதலாவது இவ்வகையிலான அரங்கம் இந்தியாவில் இதுவேயாகும்.
அரங்கிற்கு வரும் ஏழை மற்றும் மாற்றுத் திறனாளிக் குழந்தைகள் திரைப்படத்தை இலவசமாக கண்டு களிக்க அனுமதிக்கப்படுவர்.