முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட எல்லை – பிரிட்டன்
May 27 , 2021 1541 days 643 0
இது புள்ளிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு குடியேற்ற முறையை அறிமுகப் படுத்துதல் உள்ளிட்ட நாட்டின் குடியேற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட விரிவான சீரமைப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாகும்.
நுழைவு இசைவுச் சீட்டு (அ) குடியேற்றத் தகுதியின்றி பிரிட்டனுக்கு வருபவர்கள் மின்னணுப் பயண அங்கீகாரத்தினைப் பெற்றிருக்க வேண்டும் என்பதே இந்தப் புதிய நடவடிக்கையின் விதிமுறையாகும்.
நுழைவு இசைவுச் சீட்டு விண்ணப்ப மையங்களுக்குச் செல்ல வேண்டிய தேவையைக் குறைப்பதற்காக வேண்டி டிஜிட்டல் அடையாள சோதனை முறைகள் பயன்படுத்தப் படும்.
எல்லையை டிஜிட்டல் மயமாக்குவது மூலம், நாட்டினுள் எவரெவர் வருகிறார்கள், எத்தனை பேர் வெளியேறுகிறார்கள் மற்றும் இங்கு தங்க அவர்களுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளதா போன்றவற்றை அதிகாரிகள் கணக்கிட இயலும்.