TNPSC Thervupettagam

மூங்கில் கூட்டுப்பொருள் தொழில்நுட்பம்

January 29 , 2024 480 days 394 0
  • இந்திய சர்வதேச அறிவியல் விழாவின் (IISF 2023) இரண்டாவது நாளின் போது, "மூங்கில் கூட்டுப்பொருட்கள்" பற்றிய செய் நுட்ப நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆனது மூங்கில் சார்ந்த பொருட்கள் உற்பத்தி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
  • மூங்கில் கூட்டுப்பொருள் என்பது மூங்கில் இழைகளை மற்ற பொருட்களுடன் கலந்து ஒரு கூட்டுப் பொருட்களை உருவாக்கும் பொருட்கள் ஆகும்.
  • இந்த மூங்கில் கூட்டுப்பொருள் தயாரிப்பு ஆனது, நீடித்து உழைக்கும் திறன் மற்றும் பரிமாண அடிப்படையிலான நிலைப்புத் தன்மை, அதிக வலிமை, அடர்த்தி, இயந்திர வலிமை, தீ தடுப்பு, ஈரப்பத எதிர்ப்புத் திறன் மற்றும் இயற்கை மற்றும் அழகியல் தோற்றத்துடன் கூடிய தேக்கு மரத்தை ஒத்திருக்கிறது.
  • வளர்வதற்கு 30-40 ஆண்டுகள் எடுக்கும் தேக்கு மரத்தைப் போலல்லாமல், 3 முதல் 4 ஆண்டுகளுக்குள் வளர்ந்து விடும் மூங்கில்களை சிறந்த மூங்கில் கூட்டுப்பொருட்கள் உருவாக்கப் பயன்படுத்தலாம்.
  • மூங்கில் சிறந்த CO2 உறிஞ்சி ஆகும் என்பதோடு,  இது அதிக அளவில் ஆக்ஸிஜனை வெளியிடுவதால் (தோராயமாக 35%) புவி வெப்பமடைதலைத் தணிக்கவும் இது உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்